உறைபனி உலகில்
Tuesday, June 22, 2021
நான் வாசித்த புத்தகங்கள் - பகுதி -1 (My favourite books -1)
Friday, June 11, 2021
பிரிவினிலே ஒரு நாள்..!!!
பிரிவினிலே ஒரு நாள்..!!!
தனியே
தன்னந்தனியே
தந்த வலியே
இன்ப துணையே
இன்று மறந்தாய் என்னையே ..!!!
இணையே
எந்தன் இணையே
உன்னை இழந்தாய்
என்னை மறந்தாய்
துணை ஏதுமில்லையே..!!!
கடலாய்
கங்கை நதியாய்
கண்ணீர் வடித்தேன்
கரைந்தோடி வா.!!!
உடலாய்
மண் உடலாய்
புதைமண் உடலாய்
மட்குமுன் தேடி வா.!!!
நெருப்பாய்
தீப்பிழம்பாய்
எரிமலையாய்
மனம் வெடிக்கும் முன்
நீ அணைக்க வா.!!!
காற்றாய்
சூழல் காற்றாய்
புயல் காற்றாய்
மனம் கடக்கும் முன்
நீ நினைவில் வா.!!!
வெளியாய்
வெட்ட வெளியாய்
வான வெளியில்
நான் மறையும் முன்
உயிரே நீ எதிரில் வா.!!!
ப.மதிஅழகன்
Thursday, June 10, 2021
குருதி ஆட்டம் அத்தியாயம் - 1
பகைவனின் கண்
அமைதியான காலை வேளை, சூரியன் மெல்ல தன் கதிர்களை பரப்பிக்கொண்டிருந்தான். குருவிகள் குதூகலமாக கீச்சிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன.விவசாயிகளோ காளைகளை உழவுக்கு கொண்டு சென்றார்கள்.பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்கள்.சூரிய கதிர்களின் வெளிச்சம் தாளாமல் கணேசன் மெல்ல எழுந்தான்.பாயைச் சுருட்டிக் கொண்டு மெல்ல வீட்டுக்குள் செல்லும் போது, இழுத்துப் போர்த்து தூங்கி கொண்டிருந்த மனைவி அலமேலுவைப் பார்த்து பொம்பளைங்க எல்லாம் வெளிய தண்ணி மோந்துகிட்ருக்காங்க, இன்னும் என்னடி தூக்கம் என்று கத்தினான். அதை சட்டை செய்யதவளாய் அவள் திரும்பி படுத்தாள். இந்தாடி இப்போ எந்திரிக்கல அப்புறம் புரட்டி புடுவேன் என்று திட்டியவாறு கொல்லைப்புறம் சென்றான். குளித்து முடித்து வீட்டிற்குள் வரும்போது அவள் மனையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தாள். அலமேலு கஞ்சி எடுத்து வையி , சாமி கும்புட்டு வந்துடுறேன். கஞ்சி பாத்திரத்தை எடுத்து குடித்தான் , உப்பு கரித்தது . மீண்டும் மனைவி மீது எரிச்சல் கொண்டான். என்னடி கஞ்சி கரைச்சிருக்க ,மனுஷன் வாயில வைக்க முடியல, மூதேவி ஒரு நாளாவது ஒழுங்கா கடைக்கு அனுப்புறியா என்று திட்டி தீர்த்தான்.
இப்போ எதுக்கு கத்துறிங்க என்று பதிலுக்கு சீறினாள். கூறுகெட்ட சிறுக்கி என்னைய எதுத்து பேசுறியா என்று ஓங்கி அறைந்தான். இந்தாரும் சும்மா மேல கை வைக்கிற வேலை வேணாம். எங்கண்ணங்க கிட்ட சொன்ன அம்புட்டுதான் என்று விசும்பினாள் .
சீமையில்லாத அண்ணங்க என்று ஆரம்பிக்க , இடைமறித்த அவள் , இந்தாங்க எங்க அம்மா வூட்ட பத்தி பேசுனா அம்புட்டுதான் , அப்புறம் நான் எங்க ஆத்தா வூட்டுக்கு போயிடுவேன் என்று அழுதாள்.
குருதி ஆட்டம் - முன்னுரை
குருதி ஆட்டம்
நான் வாசித்த புத்தகங்கள்
நான் வாசித்த புத்தகங்கள்
அன்பு நண்பர்களுக்கு ,
நான் வாசித்த சில நூல்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பொதுவாகவே இன்றைய கால மக்களுக்கு புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாகவே கருதுகிறேன் ,
புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பவர்களும் எந்த புத்தகத்தை படிப்பது , எந்த வகை நூல்களை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருப்பதையும் பார்க்க முடிகிறது . நீங்கள் புத்தகம் படிக்கும் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளில் படித்தால் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம் .
நிறைய புத்தகங்கள் படித்திருந்தாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு முறை நான் படித்த புத்தகங்களை அசை போட வேண்டியுள்ளது. ஒரு நல்ல புத்தகம் நாம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம்மை இன்னும் மேம்படுத்தும் என்பதும் என் எண்ணம் .
அடுத்த தொடரில் இன்னும் நிறைய பகிர்வோம்.
-ப.மதி அழகன்
Wednesday, February 24, 2021
ஏலே செங்குருவி ...!!! - Yele Senguruvi !!!
ஏலே செங்குருவி ...!!!
ஏலே செங்குருவி
உன் சீலை வாசம்
மோரத்தான் வந்துருக்கேன் ..!
ஆவி போகும் பின்னே
பாதை மறக்கும் முன்னே
உன் காலடி தேடி வந்துருக்கேன் ..! (ஏலே)
நேத்து என் ரோஷம்
காத்தா போனதடி
மீண்டும் உன் வாசம்
தேடி எங்கும் அலையுதடி ..!
செத்த நேரம் உன் மடியில தல சாஞ்சா
மொத்த உசுரும் கூடுமடி..! (ஏலே)
வீழாதே என் சிங்கமே
மாறாதே என் தங்கமே
கம்ப கூழ் வச்சிருக்கேன்
கருவாடு சுட்டுருக்கேன்
ஒத்த வாயி துண்ணுப்புட்டா
போகும் உசுரு நின்னுடுமே ..!
அக்கரையில் வீச்சருவா
இக்கரையில் வெட்டருவா
உன் கையோ மல்லிகைப்பூ
என் கையோ காகிதப்பூ
சாதி தீயில் வேகுதிப்போ..! (ஏலே)
- ப.மதிஅழகன்
Monday, June 22, 2020
குருதி ஆட்டம் - Blood game ..!!!
பகையின்னு வெட்டிப்போட்டா
துணையொண்ணு வேணும்முன்னு
அருவாளா தூக்கிகிட்டு வந்தாங்க..!!!
மண்ணெல்லாம் ரத்தவாசம்
கதை சொல்ல நாவே கூசும்
விளையாட்டை விதியாக்கி விட்டாங்க..!!!
அறுத்தவனும் அறுந்து போனான்
விதைச்சவனும் நொந்து போனான்
மண்ணுக்குள்ள சண்டையிட்டு நின்னாங்க..!!!
இனியாரு காக்க போறா
வேதனையை தீர்க்க போறா
ஊருக்குள்ள சாமியும் இல்லைங்க..!!!
சொந்தமெல்லாம் கொத்தா போச்சு
ஆடு மாடு செத்தே போச்சு
யாரிருக்கா இன்னுமிங்கே வந்திங்க..!!!
வெட்டருவா வீச்சருவா
வேல்கம்பு கோடாரி - கோடி
நான் செஞ்சு தாரேன் போன
உசுரு ஒண்ணெ ஒண்ணு கொண்டாங்க ..!!!
அடுத்து எழுத போகும் ஒரு நாவலின் சுருக்கமாக இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.
-ப.மதிஅழகன்
இன்னுமென்ன தயக்கம்
இன்னுமென்ன தயக்கம்
என்னைத் தழுவிக்கொள்ள
யாருமற்ற நேரத்திலே
வந்து அணைத்துச்செல்ல..!!!
நெடுநேரம் உன் வரவுக்காக
காத்திருக்கிறேன் - மொட்டை மாடி
தோட்டம் முழுவதும் ஏங்கி நிற்கிறேன்..!!!
விட்டுப்போன சிலிர்ப்பு எல்லாம்
திரும்ப கிடைக்குமா ?
தந்து போன கீதம் இன்று
மீண்டும் பாயுமா?
சில மாலை நேரம் நடக்கையிலே
துணையாக நீ வருவாய் - பல இரவு நேரம்
விழிக்கையிலே அணைப்பாக நீ இருப்பாய் ..!!!
இன்று மட்டும் எங்கு போனாய்
காற்றே இளம் காற்றே
வந்து வீசி விட்டு போ
என் வீட்டில்..!!!
- ப.மதிஅழகன்
எந்த நாள் வரும் ? - When will the day come?
நின்ற நாள் மழை
என்னை துரத்திட..!!!
கண்டதே உயிர்
உன்னை உருகியே .!!!
அந்த நாள் சுகம்
இன்னும் நினைத்திட..!!!
விட்டதே மனம்
பட்டுப்போகிட
கெட்டதே உயிர்
உன்னை மறந்திட ..!!!
இமை நொடிகள் கூட மறக்கவில்லை
கண்மணியில் நீயும் மறைவதில்லை..!!!
தேற்றுவார் யாருமில்லை
தேடவும் வழியுமில்லை
மன்னிக்க மனமுமில்லை
மறக்க முயல்வதேயில்லை..!!!
- ப.மதியழகன்
அருள் நீர் - Blessed water
மேகம் அற்ற வானத்திலே
தாகம் தேடி திரியும் பறவை
கனவிலே கானல் நீரைக்கண்டு
கடல் கடந்து பறந்து செல்ல ..!!!
காட்டிலே கொட்டாங்குச்சியில்
கண்டது யாரோ விட்டுச் (மழை) சென்ற நீர்..!!!
இனியொரு கணம் பொறுக்க முடியாமல்
அலகை அலசியது நீராலே..!!!
அதற்கென காத்திருந்தது போல
பாய்ந்தது ஒரு நாகம்
விடுபட்ட கனவில்
சுற்றிப்பார்த்த பறவை அருகே
ஊர்ந்து கொண்டிருந்ததது ஒரு நாகம் ..!!!
பலருக்கு உணவாக
நான் இருக்கிறேன்
எனக்கான அருள்நீர்
உந்தன் கைகளால் என்று பொழிவாயோ என
விருட்டென பறந்தது ..!!!
- ப. மதிஅழகன்
Thursday, December 13, 2018
கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!
கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!
சொல்லாத ஏக்கம் அவளுக்குள்
நில்லாத பாசம் இவனுக்கு
பேசிடத்தான் ஆயிரம் வழிகள்
இருந்தும் கூட நெஞ்சமில்லை
யார் உரைப்பார்கள் முதல் கவிதை
முதல் முத்தம் - முதல் அழுகை
கண் கலங்கிட பார்த்தால்தான் காதல் கசியுமா
கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்..!!!
- ப. மதிஅழகன்
ஆயிரம் காதல்
ஆயிரம் காதல்
இன்னொரு ஜீவன் பிறக்கையிலே
தந்தவனின் குரல் கேட்க துடிக்கிறாள் தாயாக போறவள்
கட்டிவைத்த வெட்டி மானம் காற்றில் போக கட்டியவளை
காண பறந்து வருகிறான்.
பிரசவ அறையில் இரு குழந்தைகள்
வந்த உயிரை முத்தமிட்டு
தந்த உயிரின் கால்கள் தொடுகிறான்
கண்கள் கலங்கிட அவள் போர்வையினுள் கால் இழுத்துக்கொள்ள
அவள் கண்ணமுடி விலக்கி காதில் அழுகிறான்
அவளவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறாள்
ஆயிரம் காதல் அங்கே பிறக்கின்றது .
- ப. மதிஅழகன்
கவிதை தொகுப்பு :-
கவிதை தொகுப்பு
நிலை பிழை தவறும் தருணம் .. மனமங்கு
மாட்சியுமில்லை மகிமையுமில்லை மகேசனுமில்லை
இனி எவளுமில்லை போடி.
விட்டத்து மாடியில் சுற்றி திறந்த புறா
சுட்டான பின் பழி எதற்கு பாவம் எதற்கு
தந்தவன் மகேசன் எடுத்தவன் மகேசன்
பொருள் கூற எவருமில்லை அவனையன்றி..
சிறகுகளில்லா நாரை
தரையினில் சாகும் நாளை
காண்பதுமோர் பாவம்
உணர்வுகளேயினி சாகும்
யாரினி பிறப்பார் பாரும்
இடுகாடாய் இனி மாறும்.
வான் வருவான் மயிலோன்
தென் தருவான் குயிலோன்
இனி யாரிவரோ - மலர் தருவார் யாரோ
சுடுகின்ற வேலையில் பருநீர் தருவாரோ
மனம் மாறி வெதுவாகி இனிதான் இணைவாரோ
பார்க்கும் வேலையில் மாய்வரோ சாய்வாரோ
தோற்கும் வேலையில் மீள்வாரோ எழுவாரோ
வான் வருவான்... வருவான் .. வான் வழி வருவான் ...
காரிருள் மீது கதிரவன் தோன்றி
ஆயிரமாயிரம் விளக்குகள் ஏற்றி வைத்தான் ..
ஒளியது தோன்றியது அவனாலென அறிஞனும் சொல்லி வைத்தான்
கண்ணே உன்னை கண்டவுடன் மெய்யியல் நான் உணர்ந்தேன்
நீ துயிலெழுந்து சோம்பல் முறித்து வாசல் கோலம் போட
காணத்தான் சூரியனும் காத்திருக்கிறான்
சந்திரனுக்கு மட்டும் கோவம் உன் துயில் முகத்தை காணவில்லையென்று
அந்த மதி காணாததை இந்த மதி ஆயிரம் முறை பார்த்திருக்கிறான் இமைக்காமல்
விட்டு போ கவலையே..!!!
- ப. மதிஅழகன்
Thursday, May 10, 2018
கோட்டைப்புரம்
நீ நல்ல ஊரா கெட்ட ஊரா கோட்டைபுரம்
சாமி வந்து எதிரில் நின்னா கோட்டைபுரம்
நீ சாட்சி வந்து சொல்லிடனும் கோட்டைபுரம். (2)
என் சாமி.. என் சாமி .. வரம் காமி
உன்னை நம்பி வந்த மக்களுக்கு
நீயே காக்கும் தெய்வமுன்னு
சாட்சி சொல்ல வந்திடணும்
வேட்டை. வேட்டை. கோட்டை.
பாவம் கேட்கும் மக்க இங்க ஒண்ணாகுது
உன் தண்டனைக்கு எதிரி குலம் மண்ணாகுது
மனம் மாறி.. மனம் மாறி.. வர வேணும் வரம் வேணும்
எங்க முன்னோருக்கு வாக்கு தந்த காத்தருள.
வேட்டை. வேட்டை. கோட்டை. (கோட்டைபுரம்)
நீறு நிலமெல்லாம் இங்க உன்னோடது
உன் அன்பு மட்டும் இந்த மண்ணோடது
என் ராசா.. என் ராசா.. மனமிறங்கி வந்திடுயா
உன் மக்களுக்கு நல்ல வாழ்க்கை தந்திடுயா
வேட்டை. வேட்டை. கோட்டை. (கோட்டைபுரம்)
இது ஒரு சினிமா பாடலா நினைச்சு எழுதி இருக்கேன், கோட்டைபுரம் எனும் ஊரில் வாழுகிற மக்கள் தன்னுடைய காவல் தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டு பாடுற மாதிரியான சூழ்நிலைக்கு எழுதின பாடல் வரிகள்.
- ப. மதிஅழகன்
கனவு..!!!
இரவினில் ஓடி
கண்களை மூடி
கனவினை திறந்தேன்.!!!
எதிர்பட்டால்
மனம் உடன்பட்டால்
கரம் இடை தொட என் வசம்பட்டால்
கனியென்றேன்
மணியென்றேன்
முல்லை கொடியென்றேன்
முத்துச் சரமென்றேன்.!!!
அல்லி கோடி போல அணைத்து கொண்டவள்
அழுத்தி தந்தாள் ஆயிரம் முத்தங்கள்
கைகளை மடித்து மாராப்பை விலக்கினேன்.!!!
ரோஜா பூவாய் கன்னம் சிவந்தவள்
கண்களை மூடி கைகளால் மறைத்தால் மானத்தை
அன்ன நடை சின்ன இடை வஞ்சி இவள் பருவ தேனோ
குடித்து விட துடித்தது மனம்.!!!
அவள் காதை கடித்து கேட்டேன் இன்னும் என்ன வேண்டுமென்று
கீச்சு குரலில் மூச்சு முட்ட கனி போல் வாய் திறந்து
- கண்ணோடு கண் நோக்கினாள்
ஆயிரம் அம்புகளை எதிர்கொள்ளும் மனம்
மானம்கெட்டு அவள் காலடியில் வீழ்ந்து கிடந்தது.!!!
மூர்ச்சையாகும் முன் இடை தொட்டு
வலை உடைத்து இருக்க அணைத்தேன் செந்தாமரையை
தித்திக்கும் கரும்பாக இதழ் மூடி இனிப்பாக்கினால்.!!!
மது ரசம் குடிக்க எத்தனித்த போது
எவனோ ஒருவன் தட்டி எழுப்பினான் ..
சார் இஞ்சி மரப்பா வேணுமா .. இஞ்சி மரப்பா ..
அட பாவி.. அழித்து விட்டாயே . என் வசந்த சேனையை ..
வந்தவனை கடிந்து விட்டு
மறைந்து போனவளை மறுபடி தேடி கனவு தேசம் போனேன்
இன்று வரை ஏனோ அவள் வருவதில்லை.!!!
- ப. மதிஅழகன்
Tuesday, August 8, 2017
சிறு வயது பாடல் - Childhood song
காலங்கள் பொல்லதவைகளாதலால் காலத்தை பிரயஜோனப்படுத்தி கொள்ளுங்கள் .
வாலிபனே உனது வாழ்வினில் சந்தோசம் கொள் . உனது சந்தோசம் எனது நெஞ்சை பூரிப்பாகட்டும் .
உனது கண்ணின் வழிகளிலும் காட்சியிலும் நட .
ஆனால் இவைகள் எல்லா நிமித்தம் தேவன் உம்மோடு இருப்பராக ..!!!
மகனே மகளே உணர்ந்தே ஓடி வா என்னை ஏற்பதில் தடை என்னவோ
பரமகணமே உணர்ந்தே கொள்ளவா .. இந்த மாற்றுயிர் நிற்பதென்னவோ !!!
Tuesday, August 1, 2017
வழிப்போக்கன் - Kavithai
கடவுளின் முகம் :-
மேகம் எந்தன் சிறகு
வானம் எந்தன் படகு
இதோ வருகிறேன்
கடவுளின் முகம் காண..!!!
தேடல் :-
புதிய வானம் படைத்து
ஈரேழு லோகம் ஆள படை சூழ
மந்திரி ஆனேன் மன்னன் ஆனேன்
இதோ மனிதனாக முயல்கிறேன்
ஓடும் இந்த தனிமையில் என்னை
மறந்து என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்
துறவு :-
ஓடும் ஓடையில் ஓடாமல்
ஒய்யாரமாய் என்னுள் இருக்கும்
ஆசை கோபம் காமம் செருக்கு - நீண்ட கால நண்பர்களே
மண்டியிட்டு மாலையிடுகிறேன்
செல்லுங்கள் என்னை விட்டு
நீ வருவாய் என :-
உயிர் மட்டும் நீயென்று சென்றவள்
உயிர் நீங்கி உடல் நசுங்கி
பிண்டத்தினை பிணந்தின்னி போல்
பார்ப்பதென்ன கொடுமை
விடுகதை கேட்டு விடை கேட்கிறாய்
விடும் (உயிர் ) கதையில் விடை தேடி
விதை மூடி வைக்கிறேன் நீ வருவாய் என.
- ப.மதிஅழகன்
Wednesday, June 7, 2017
தனிமை தவம் - Thanaimai Thavam
இந்த உலகத்தில் நம்மை யாராவது மறந்துவிடுவார்களோ என்று சிலருக்கு தோன்றுகிறது . மறந்து விடாமல் இருக்க என்ன செய்யலாம் .. காலம் முழுக்க மக்கள் மனதில் நிலைத்திருக்க சாகசம் செய்ய வேண்டுமா , தொண்டு , அரசியல் , கலை , விளையாட்டு இதில் எதாவது ஒன்றில் சிறந்து விளங்க வேண்டுமா ??
நாம் உயிருடன் வாழும் போதே நாம் பலரை மறந்து விடுகிறோம், ஆசிரியர்கள் , சலூன் கடைக்காரர் , பூசாரி இப்படி பல கேரக்டர் நம்ம வாழ்க்கையில வந்துட்டு போறாங்க . என் பள்ளி நண்பர்கள் கூட நான் இன்னும் நட்புல இருக்கிறேன்னு சொல்றது காதுல கேட்குது.. ஆனால் ஒரு விஷயம் .. எல்லா நண்பர்கள் கூடவும் உங்களால ஒரேய அளவுல இருக்க முடியாது . அது கொஞ்சம் மாறுபடும்.
மனம் எப்பவுமே அப்படித்தான். ஆனா நாம இங்க பேச போறது மனதை பத்தி இல்லை.
என் நண்பர் ஒருத்தர் சொன்னாரு ,
இந்த உலகம் நம்மை நினைச்சி பார்க்க கூடாது, இப்படி ஒருத்தன் இந்த உலகத்துல இருந்தானே யாருக்கும் தெரிய கூடாதுனு நினைக்கிறவன். எங்க போவான் ? எப்படி வாழ்வான்? அவன் மனசு எப்படி பட்டது?
இருட்டு உலகத்துல தனியா இருக்கிற அவனை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்கா ?
அவனை பார்க்கிறதுல உங்களுக்கு வேணும்னா சுவாரசியமா இருக்கலாம். ஆனால் அவனை பாக்க நெனச்சா நீங்கதான் அவனோட முதல் எதிரி .. தீரதா தனிமையில இருக்கும் அவனை பல பேரு பார்க்க போய் இறந்துட்டாங்க , இல்லை தொலஞ்சி போய்ட்டாங்க , திரும்பி வரலைன்னு வச்சிக்கலாமே .
அவனை பார்க்க போறேன் வரிங்களானு கேட்டாரு ? எனக்கு தூக்கிவாரி போட்டது . இவர் என்ன சாகரத்துக்கு கூப்பிடறாருனு. வர முடியாதுனு பல முறை சொல்லியும் வார கணக்கா , மாத கணக்கா என்னை தொல்லைபடுத்தி என்னை சம்மதிக்க வச்சிட்டாரு. எனக்குன்னு பெருசா கடமை இல்லாததால நானும் ஒத்துக்கிட்டேன் . சரி இனி எல்லாம் விதி படி நடக்கட்டும்னு இதோ கெளம்புறோம் . ஆமா அவன் எங்கே இருக்கான் ? என்ன பன்னிக்கிட்டுருப்பான் ? யாருக்கு தெரியும் . போய் பார்ப்போம் .
பயணம் தொடரும்...
Tuesday, March 7, 2017
மகளிர் தின வாழ்த்துக்கள்
ஆதியவள்
அந்தமவள்
ஆண்களை ஈன்ற பிரம்மாவும் அவள் ..!!!
தாயவள்
தாராமவள்
தங்கையவள்
ஆண்களை காக்கும் ஈசனும் அவள் ..!!!
நீரவள்
நிலமவள்
கனளவள்
கொடியோரை அழித்திடும் ஹரனும் அவள் !!!
Tuesday, January 3, 2017
நீயும் நானும் - you and me
நீயும் நானும்
இன்னும் ஒரு
போர்வைக்குள்ளே .
மனம் மட்டுமிங்கு
போன இடம்
கனவுக்குள்ளே.
இமைக்கா நொடிகள்
என்னுள் நீ வந்து போக
இமை நடுவில் நீ
நின்று கொண்டு
என்னை மூட.
விழி திறக்கும் போது
எதிரில் நீயே இருந்தாய் கண்ணே
கண் மூடும் போது உன்னில்
என்னை புதைத்தாய் பெண்ணே.
உன்னோடு சாலையோரம்
நான் போகும் போது
நானோடு நாமும் ஆகிறேன் .
பின் நின்று காற்று என்னை
முன் தள்ளும் போது உன்
கூந்தலில் முகம் சாய்கிறேன் .
நீ இன்னும் அங்கே
நான் மட்டும் இங்கே
இடையில் தடையும் இல்லை
உந்தன் இடையும் இல்லை .
உயிர் போகும் போகட்டும்
உந்தன் மூச்சுக்காற்றை
எட்டு திக்கும் எந்தன்
ஆவி தேடி போகும் .
- ப. மதி அழகன்






