Tuesday, January 3, 2017

நீயும் நானும் - you and me

நீயும் நானும்  - you and me

நீயும் நானும்
இன்னும் ஒரு
போர்வைக்குள்ளே .

மனம் மட்டுமிங்கு
போன இடம்
கனவுக்குள்ளே.

இமைக்கா நொடிகள்
என்னுள் நீ வந்து போக
இமை நடுவில்  நீ
நின்று கொண்டு
 என்னை மூட.

விழி திறக்கும் போது
எதிரில் நீயே இருந்தாய் கண்ணே
கண் மூடும் போது  உன்னில்
என்னை புதைத்தாய் பெண்ணே.

உன்னோடு சாலையோரம்
நான் போகும் போது
நானோடு நாமும் ஆகிறேன் .

பின் நின்று காற்று என்னை
முன் தள்ளும் போது உன்
கூந்தலில் முகம் சாய்கிறேன் .

நீ இன்னும் அங்கே
நான் மட்டும் இங்கே
இடையில் தடையும் இல்லை
உந்தன் இடையும் இல்லை .

உயிர் போகும் போகட்டும்
உந்தன் மூச்சுக்காற்றை
எட்டு திக்கும் எந்தன்
ஆவி தேடி போகும் .


   - ப. மதி அழகன்




எதை நோக்கிப் போகிறோம்? A Journey to search the Nature God - 2

பகுதி  -1  http://infomitra10.blogspot.in/2016/12/blog-post.html

இயற்கை கடவுளை  தேடி ஒரு பயணம்  - 2 !!! ?


இயற்கை மனிதனை எச்சரிக்கை செய்வதில்லையா என்று கேட்டோம் ?? அது எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறது .. வெள்ளமாக, புயலாக , நிலநடுக்கமாக ... ஆனால் மனிதன் இன்னும் தன்னை இயற்கையை விட பெரியவனாக நினைத்து கொண்டு இருக்கிறான்.. ஒரு  தாய் எப்படி தன்  மகன்  இன்னல் தந்தாலும் பொறுத்துக்கொள்கிறாளோ அதேபோல்தான் பூமி தாயும் பொறுத்து கொண்டு இருக்கிறாள்.. அவள் பொறுமைக்கும்  அளவுண்டு. 

இயற்கை விதியை மீறி இங்கு மனிதன் நடத்தும் எந்த ஆராய்ச்சிக்கும் நிகழும் பின்விளைவு அவன் 100% உணர வாய்ப்பில்லை. நம்மை  அறியாமலே இந்த உலகை நாம் அழிக்க ஆரம்பித்துவிட்டோம் .. 

"இயற்கை நம்மை கை கழுவும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது " 

இங்கு இறப்பு என்பது உயிர் பிரிவதில்லை .. இயற்கை அல்லது பஞ்சபூதம் தனது செயல்களை எந்த உடலில் நிறுத்திவிட்டதோ அல்லது எந்த உடல் பஞ்சபூதத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லையோ அந்த உடல் பூமியில் வாழ தகுதியற்றது ஆகிறது.

இருக்கும் வரை ஒரு மனிதன் தன் சக்தி கொண்டு இயற்கையை சுரண்டி எடுக்கிறான் . ஒரு போதும் இயற்கையை மீட்டெடுக்க முயல்வதில்லை.. அதனால் அழிவு இன்று வாசல் வரை வந்துவிட்டது .

யார் நம்மை காப்பாற்றுவார்?


இன்னும் பேசுவோம்.!!!