Monday, June 22, 2020

குருதி ஆட்டம் - Blood game ..!!!

குருதி ஆட்டம்..!!!



பகையின்னு வெட்டிப்போட்டா
துணையொண்ணு வேணும்முன்னு
அருவாளா தூக்கிகிட்டு வந்தாங்க..!!!

மண்ணெல்லாம் ரத்தவாசம்
கதை சொல்ல நாவே கூசும்
விளையாட்டை விதியாக்கி விட்டாங்க..!!!

அறுத்தவனும் அறுந்து போனான்
விதைச்சவனும் நொந்து போனான்
மண்ணுக்குள்ள சண்டையிட்டு நின்னாங்க..!!!

இனியாரு காக்க போறா
வேதனையை தீர்க்க போறா
ஊருக்குள்ள சாமியும் இல்லைங்க..!!!

சொந்தமெல்லாம் கொத்தா போச்சு
ஆடு மாடு செத்தே போச்சு
யாரிருக்கா இன்னுமிங்கே வந்திங்க..!!!

வெட்டருவா வீச்சருவா
வேல்கம்பு கோடாரி - கோடி
நான் செஞ்சு தாரேன் போன
உசுரு ஒண்ணெ ஒண்ணு கொண்டாங்க ..!!!



அடுத்து எழுத போகும் ஒரு நாவலின் சுருக்கமாக இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.

-ப.மதிஅழகன்


இன்னுமென்ன தயக்கம்

இன்னுமென்ன தயக்கம்..!!!


இன்னுமென்ன தயக்கம்
என்னைத் தழுவிக்கொள்ள
யாருமற்ற நேரத்திலே
வந்து அணைத்துச்செல்ல..!!!

நெடுநேரம் உன் வரவுக்காக
காத்திருக்கிறேன்  - மொட்டை மாடி
தோட்டம் முழுவதும் ஏங்கி நிற்கிறேன்..!!!

விட்டுப்போன சிலிர்ப்பு எல்லாம்
திரும்ப கிடைக்குமா ?
தந்து போன கீதம் இன்று
மீண்டும் பாயுமா?

சில மாலை நேரம் நடக்கையிலே
துணையாக நீ வருவாய் - பல இரவு நேரம்
விழிக்கையிலே அணைப்பாக நீ இருப்பாய் ..!!!

இன்று மட்டும்  எங்கு போனாய்
காற்றே இளம் காற்றே
வந்து வீசி விட்டு போ
என் வீட்டில்..!!!

- ப.மதிஅழகன்

எந்த நாள் வரும் ? - When will the day come?

எந்த நாள் வரும் ?



நின்ற நாள் மழை
என்னை துரத்திட..!!!

கண்டதே உயிர்
உன்னை உருகியே .!!!

அந்த நாள் சுகம்
இன்னும் நினைத்திட..!!!

விட்டதே மனம்
பட்டுப்போகிட
கெட்டதே உயிர்
உன்னை மறந்திட ..!!!

இமை நொடிகள் கூட மறக்கவில்லை
கண்மணியில் நீயும் மறைவதில்லை..!!!

தேற்றுவார் யாருமில்லை
தேடவும் வழியுமில்லை
மன்னிக்க மனமுமில்லை
மறக்க முயல்வதேயில்லை..!!!


- ப.மதியழகன்

அருள் நீர் - Blessed water




மேகம் அற்ற வானத்திலே
தாகம் தேடி திரியும் பறவை
கனவிலே கானல் நீரைக்கண்டு
கடல் கடந்து பறந்து செல்ல ..!!!

காட்டிலே கொட்டாங்குச்சியில்
கண்டது யாரோ விட்டுச் (மழை) சென்ற நீர்..!!!

இனியொரு கணம் பொறுக்க முடியாமல்
அலகை அலசியது நீராலே..!!!

அதற்கென காத்திருந்தது போல
பாய்ந்தது ஒரு நாகம்

விடுபட்ட கனவில்
சுற்றிப்பார்த்த பறவை அருகே
ஊர்ந்து கொண்டிருந்ததது ஒரு நாகம் ..!!!

பலருக்கு உணவாக
நான் இருக்கிறேன்
எனக்கான அருள்நீர்
உந்தன் கைகளால் என்று பொழிவாயோ என
விருட்டென பறந்தது ..!!!


- ப. மதிஅழகன்