Thursday, May 10, 2018

கோட்டைப்புரம்

கோட்டைபுரம் கோட்டைபுரம் கோட்டைபுரம்
நீ நல்ல ஊரா கெட்ட ஊரா கோட்டைபுரம்
சாமி வந்து எதிரில் நின்னா கோட்டைபுரம்
நீ சாட்சி வந்து சொல்லிடனும் கோட்டைபுரம். (2)

என் சாமி.. என் சாமி .. வரம் காமி
உன்னை நம்பி வந்த மக்களுக்கு
நீயே காக்கும் தெய்வமுன்னு
சாட்சி சொல்ல வந்திடணும்
வேட்டை. வேட்டை. கோட்டை.

பாவம் கேட்கும் மக்க இங்க ஒண்ணாகுது
உன் தண்டனைக்கு எதிரி குலம் மண்ணாகுது
மனம் மாறி.. மனம் மாறி.. வர வேணும் வரம் வேணும்
எங்க முன்னோருக்கு வாக்கு தந்த காத்தருள.
வேட்டை. வேட்டை. கோட்டை.  (கோட்டைபுரம்)

நீறு நிலமெல்லாம் இங்க உன்னோடது
உன் அன்பு மட்டும் இந்த மண்ணோடது
என் ராசா.. என் ராசா.. மனமிறங்கி  வந்திடுயா
உன் மக்களுக்கு நல்ல வாழ்க்கை  தந்திடுயா
வேட்டை. வேட்டை. கோட்டை.  (கோட்டைபுரம்)

இது ஒரு சினிமா பாடலா நினைச்சு எழுதி இருக்கேன், கோட்டைபுரம் எனும் ஊரில் வாழுகிற மக்கள் தன்னுடைய காவல் தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டு பாடுற மாதிரியான சூழ்நிலைக்கு எழுதின பாடல் வரிகள்.

- ப. மதிஅழகன்

கனவு..!!!

                                                   
                                                             

இரவினில் ஓடி
கண்களை மூடி
கனவினை திறந்தேன்.!!!

எதிர்பட்டால்
மனம் உடன்பட்டால்
கரம் இடை தொட என் வசம்பட்டால்
கனியென்றேன்
மணியென்றேன்
முல்லை கொடியென்றேன்
முத்துச் சரமென்றேன்.!!!

அல்லி கோடி போல அணைத்து கொண்டவள்
அழுத்தி தந்தாள் ஆயிரம் முத்தங்கள்
கைகளை மடித்து மாராப்பை விலக்கினேன்.!!!

ரோஜா பூவாய் கன்னம் சிவந்தவள்
கண்களை மூடி கைகளால் மறைத்தால் மானத்தை
அன்ன நடை சின்ன இடை வஞ்சி இவள் பருவ தேனோ
குடித்து விட துடித்தது மனம்.!!!

அவள் காதை கடித்து கேட்டேன் இன்னும் என்ன வேண்டுமென்று
கீச்சு குரலில் மூச்சு முட்ட கனி போல் வாய் திறந்து
 - கண்ணோடு கண் நோக்கினாள்
ஆயிரம் அம்புகளை எதிர்கொள்ளும் மனம்
 மானம்கெட்டு அவள் காலடியில் வீழ்ந்து கிடந்தது.!!!

மூர்ச்சையாகும் முன் இடை தொட்டு
வலை உடைத்து இருக்க அணைத்தேன் செந்தாமரையை
தித்திக்கும் கரும்பாக இதழ் மூடி இனிப்பாக்கினால்.!!!

மது ரசம் குடிக்க எத்தனித்த போது
எவனோ ஒருவன் தட்டி எழுப்பினான் ..
சார் இஞ்சி மரப்பா வேணுமா .. இஞ்சி மரப்பா ..
அட பாவி.. அழித்து விட்டாயே . என் வசந்த சேனையை ..
வந்தவனை கடிந்து விட்டு
மறைந்து போனவளை மறுபடி தேடி கனவு தேசம் போனேன்
இன்று வரை ஏனோ அவள் வருவதில்லை.!!!

- ப. மதிஅழகன்