Thursday, December 13, 2018

கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!



                கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்.!!!


சொல்லாத ஏக்கம் அவளுக்குள்
நில்லாத பாசம் இவனுக்கு
பேசிடத்தான் ஆயிரம் வழிகள்
இருந்தும் கூட நெஞ்சமில்லை
யார் உரைப்பார்கள் முதல் கவிதை
முதல் முத்தம்  - முதல் அழுகை
கண் கலங்கிட பார்த்தால்தான் காதல் கசியுமா
கரையோரம் தெரிவதில்லை கண்ணீர் துளிகள்..!!!




- ப. மதிஅழகன்

ஆயிரம் காதல்


                                            ஆயிரம் காதல்

இன்னொரு ஜீவன் பிறக்கையிலே
தந்தவனின் குரல் கேட்க துடிக்கிறாள் தாயாக போறவள்
கட்டிவைத்த வெட்டி மானம் காற்றில் போக கட்டியவளை
காண பறந்து வருகிறான்.
பிரசவ அறையில் இரு குழந்தைகள்
வந்த உயிரை முத்தமிட்டு
தந்த உயிரின் கால்கள் தொடுகிறான்
கண்கள் கலங்கிட அவள்  போர்வையினுள் கால் இழுத்துக்கொள்ள
அவள் கண்ணமுடி விலக்கி காதில் அழுகிறான்
அவளவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறாள்
ஆயிரம் காதல் அங்கே பிறக்கின்றது .

- ப. மதிஅழகன்

கவிதை தொகுப்பு :-


                                                   கவிதை தொகுப்பு


நிலை பிழை தவறும் தருணம் .. மனமங்கு
மாட்சியுமில்லை மகிமையுமில்லை மகேசனுமில்லை
இனி எவளுமில்லை போடி.


விட்டத்து மாடியில் சுற்றி திறந்த புறா
சுட்டான பின் பழி எதற்கு பாவம் எதற்கு
தந்தவன் மகேசன் எடுத்தவன் மகேசன்
பொருள் கூற எவருமில்லை அவனையன்றி..

சிறகுகளில்லா நாரை
தரையினில் சாகும் நாளை
காண்பதுமோர் பாவம்
உணர்வுகளேயினி சாகும்
யாரினி பிறப்பார் பாரும்
இடுகாடாய் இனி மாறும்.


வான் வருவான் மயிலோன்
தென் தருவான் குயிலோன்
இனி யாரிவரோ - மலர் தருவார் யாரோ
சுடுகின்ற வேலையில் பருநீர் தருவாரோ
மனம் மாறி வெதுவாகி இனிதான் இணைவாரோ
பார்க்கும் வேலையில் மாய்வரோ சாய்வாரோ
தோற்கும் வேலையில் மீள்வாரோ எழுவாரோ
வான் வருவான்... வருவான் .. வான் வழி வருவான் ...

காரிருள் மீது கதிரவன் தோன்றி
ஆயிரமாயிரம் விளக்குகள் ஏற்றி வைத்தான் ..
ஒளியது தோன்றியது அவனாலென அறிஞனும் சொல்லி வைத்தான்
கண்ணே உன்னை கண்டவுடன் மெய்யியல் நான் உணர்ந்தேன்
நீ துயிலெழுந்து சோம்பல் முறித்து வாசல் கோலம் போட
காணத்தான் சூரியனும் காத்திருக்கிறான்
சந்திரனுக்கு மட்டும் கோவம் உன் துயில் முகத்தை காணவில்லையென்று
அந்த மதி காணாததை இந்த மதி ஆயிரம் முறை பார்த்திருக்கிறான் இமைக்காமல்
விட்டு போ கவலையே..!!!
- ப. மதிஅழகன்