Wednesday, June 7, 2017

தனிமை தவம் - Thanaimai Thavam




இந்த உலகத்தில் நம்மை யாராவது மறந்துவிடுவார்களோ என்று சிலருக்கு தோன்றுகிறது . மறந்து விடாமல் இருக்க என்ன செய்யலாம் .. காலம் முழுக்க மக்கள் மனதில் நிலைத்திருக்க   சாகசம் செய்ய வேண்டுமா , தொண்டு , அரசியல் , கலை , விளையாட்டு இதில் எதாவது ஒன்றில் சிறந்து விளங்க வேண்டுமா ??

நாம் உயிருடன் வாழும் போதே நாம் பலரை மறந்து விடுகிறோம், ஆசிரியர்கள் , சலூன் கடைக்காரர் , பூசாரி இப்படி பல கேரக்டர் நம்ம வாழ்க்கையில வந்துட்டு போறாங்க . என் பள்ளி நண்பர்கள் கூட நான் இன்னும் நட்புல இருக்கிறேன்னு சொல்றது காதுல கேட்குது.. ஆனால் ஒரு விஷயம் .. எல்லா நண்பர்கள் கூடவும் உங்களால ஒரேய அளவுல இருக்க முடியாது . அது கொஞ்சம் மாறுபடும்.

மனம் எப்பவுமே அப்படித்தான்.  ஆனா நாம இங்க பேச போறது மனதை பத்தி இல்லை.

என் நண்பர் ஒருத்தர் சொன்னாரு ,

இந்த உலகம் நம்மை நினைச்சி பார்க்க கூடாது, இப்படி ஒருத்தன் இந்த உலகத்துல இருந்தானே யாருக்கும் தெரிய கூடாதுனு நினைக்கிறவன். எங்க போவான் ? எப்படி வாழ்வான்? அவன் மனசு எப்படி பட்டது?
இருட்டு  உலகத்துல தனியா இருக்கிற அவனை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்கா ?

அவனை பார்க்கிறதுல உங்களுக்கு வேணும்னா சுவாரசியமா இருக்கலாம். ஆனால் அவனை பாக்க நெனச்சா நீங்கதான் அவனோட முதல் எதிரி .. தீரதா தனிமையில இருக்கும் அவனை பல பேரு பார்க்க போய் இறந்துட்டாங்க , இல்லை தொலஞ்சி போய்ட்டாங்க , திரும்பி வரலைன்னு வச்சிக்கலாமே .

அவனை பார்க்க போறேன் வரிங்களானு கேட்டாரு ? எனக்கு தூக்கிவாரி போட்டது . இவர் என்ன சாகரத்துக்கு கூப்பிடறாருனு. வர முடியாதுனு பல முறை சொல்லியும் வார கணக்கா , மாத கணக்கா என்னை தொல்லைபடுத்தி என்னை சம்மதிக்க வச்சிட்டாரு. எனக்குன்னு பெருசா கடமை இல்லாததால நானும் ஒத்துக்கிட்டேன் . சரி இனி எல்லாம் விதி படி நடக்கட்டும்னு இதோ கெளம்புறோம் . ஆமா அவன் எங்கே இருக்கான் ? என்ன பன்னிக்கிட்டுருப்பான் ? யாருக்கு தெரியும் . போய் பார்ப்போம் .

பயணம் தொடரும்...