Wednesday, December 28, 2016

இனி என்ன வேண்டும் !!!



இனி
என்ன
வேண்டும்  !!!

அன்னை
அவள்
இருக்கையிலே !!!

கஞ்சியோ
கூழோ
தாயே
நீ தந்தால்
எதுவும் எனக்கு
அமிர்தமே  !!!

உண்டி மறந்து
உதிரம் தந்து
எனது ஊன்
வளர்த்தாய் தாயே!!!

சிட்டெறும்போன்று
என்னை கடித்தாலும்
உன்னுடைய  கண் அல்லவா
முதலில் குளமாகும் !!!

மறந்தும் என்னை
அடித்து விட்டால்
மறைவாய் நின்று
அழுவாயே !!!

ஒவ்வொரு முறையும்
நான் சாதிக்கும் போதும்
உன் கண்களில் காணும்
பெருமிதம் - அதை விட
எனக்கென்ன விருது
வேண்டுமம்மா !!!

என்னிடம் எதுவும்
கேட்டதில்லை இதுநாள்
வரையில் -என் நலனை
தவிர .!!!

கவலைகள் கோடி
இருந்தாலும் - செல்வங்கள்
கோடி இருந்தாலும் ஒரு
நொடி உன் மடியினில்
தூங்கிட அனைத்தும்
அற்பமாகிவிடுகிறது தாயே !!!

என்னை ஈன்றவளே - இனி
ஒரு வரம் தான் உன்னை
கேட்கிறேன் - அடுத்த
பிறவியில் என் மகளாய்
பிறக்க வேண்டும் - என்
பிறவி கடனை அடைக்க
வேண்டும் தாயே!!!

 ப. மதி அழகன்.



Monday, December 19, 2016

கேளாய் தமிழா கேளாய் - Listen Tamil People


கேளாய் தமிழா கேளாய் 
இனியொரு கணம் பொறுத்தது போதும் 
பெரும் புயலென புறப்பட்டு - வஞ்சித்து 
வென்றோர்க்கு பரணியில் இனி உயிர்
வாழ இடமில்லை என்று உரக்க சொல்வோம்.

உன் பார்வையின் வெப்பமது தாளாமல் வெந்து மடியட்டும் வீணர்கள் 
வரிந்து கட்டி போர் முனையிலே அவன் புறமுதுகை தொட்டு பார்க்கட்டும் நமது வாள்கள்;
நின்று போனதும் அமைதி என்று நினைத்தயா வெறும் வேடிக்கை மனிதனல்ல தமிழன் 
வீரமது சொல்லில் வருவதல்ல, தமிழ் தாயின் மார்பில் வருவது.

இடமது வலமது யாராயினும் இனியேனும் எங்களை சீண்ருடாதிருந்தால் அடைவாய் பயனை 
இல்லையேல் தமிழன் உனக்கு காட்டுவான் எமனை. 
வந்தோர்க்கும் வாழ்விழந்தோர்க்கும் அள்ளி கொடுக்கும் மண் எங்கள் மண் 
மண் புழுவாக நினைத்தால் மண்ணிற்கு உரமாக்கி விடுவோம் உன்னை 

சொல்லுக்கும் வில்லுக்கும் மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொருளுக்கும் 
கலைக்கும் அழகுக்கும் கவிக்கும் பேர் போனது தமிழனின் பெருமை 
அறிவியலை வெள்ளையன் அண்ணாந்து பார்க்கையில் அணுவை விவரித்தாள் அவ்வை கிழவி 
அங்கே இலக்கியம் இல்லாத போதே என் பாட்டன் முப்பாட்டன் 
ஆயிரமாயிரம் அற்புதங்களை படைத்தது விட்டான் 

பிறிதொரு மொழியையோ மக்களையோ வேற்றுமை கருதும் வழக்கம் இல்லை எங்களுக்கு 
என் பாட்டன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்  , வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினேன் என்றார் - அவர்கள் வழி வந்தவர்கள் நாங்கள் இயற்கை அன்னை தந்த இப்புவியை 
தமிழ் தாய் தந்த வரமாய் வணங்கி நிற்கிறோம் .  

எதை நோக்கிப் போகிறோம்? A Journey to search the Nature God


இயற்கை கடவுளை  தேடி ஒரு பயணம்  - 1 !!! ?

 பிறவா நிலையை தருவாய் இறைவா !!!
இனி உன்னை பிரியாதொரு நிலை தருவாய் இறைவா !!!
கடவுளிடம் இப்படி வேண்டி கொள்கிறான் ஒரு பக்தன்.


 சூரியனிலிருந்து பிரிந்த பூமிப்பந்து ஈர்ப்பு விசையால் கட்டுப்பட்டு நிற்கவும் மனமில்லாமல்   விட்டு ஓடிடவும் மனமில்லாமல் தன்னையும் சூரியனையும் சுற்றி வருகிறது . சரி விஷயத்துக்கு வருவோம்.

மனிதனே இல்லாத அந்த காலகட்டம் எப்படி இருந்திருக்கும் . கற்பனை செய்து பார்ப்போமா, பூமி  முழுவதும் சுத்தமான குடிநீர் , காற்று முக்கியமாக அமைதி அமைதியாய் இருந்திருக்கும். பறப்பன, ஊர்வன , நீந்துவன என எல்லா உயிரினமும்  தங்கள் இனத்தை பெருக்கி   இயற்கை வளங்களை  சரி சமமாக இல்லா விட்டாலும் இயற்கை நியதிக்கு உட்பட்டு  பங்கிட்டு கொண்டிருக்கும்.

எரிமலையும் நிலநடுக்கமும் சுனாமியும் சூறாவளியும் எந்த அறிவிப்புமின்றி அங்கங்கே வந்து போய் இருக்கும். உண்மையில் சில அறிவிப்புகள் இருக்கவும் செய்தன .  நீங்கள் படுத்து தூங்கும் அறையோ , இதை நீங்கள் படிக்கும் இடமோ கண்டிப்பாக காடாகவோ சம வெளியாகவோ நீர் நிலையாகவோ இருந்திருக்கலாம்.


சரி இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைத்து பார்ப்போம். கடவுள் நம்மை ஏன் படைத்திருப்பார் ? நம்மை மட்டுமல்ல இந்த பூமியில் உள்ள புல் ,பூண்டு முதல் மனிதன் வரை ஏன் படைத்திருப்பார் ?

உற்று நோக்கினால் ஒரு விஷயம் புலப்படும். எல்லா உயிரினங்களும் ஒரே விஷயத்தைதான் செய்கின்றன . அது என்ன? தன் இனத்தை பெருக்குதல் மற்றும் காத்தல் . அழித்தல் பிற இனத்தாலோ அல்லது சுய இனத்தாலோ நடப்பது உண்டு. அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இனத்தை பெருக்கத்தான் கடவுளால் படைக்கப்பட்டோமா? இருக்கலாம்.
அனால் இங்கு படைக்கப்பட்டது எதுவாயினும் அழியவும் செய்கின்றது இது இயற்கையின் நியதி.
அழிவு எல்லாவற்றிற்கும் உண்டு. அப்போது அது பூமிக்குமா ? சூரியனுக்குமா?பிரபஞ்சத்துக்குமா? கடவுளுக்குமா ?.இப்படி உயிரனங்கள் தோன்றி மடிவதால் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும் .
இதை பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்.

மனிதன் இல்லாத உலகம் எத்தனை அழகாக இருந்திருக்கும் . இன்றும் மனிதன் நுழையாத காடுகள் இருக்கவே செய்கின்றன. மனிதன் தான் வாழும் பூமியை இப்படி நாசமாக்குவது கடவுளுக்கு/இயற்கைக்கு  தெரியாதா ? தெரிந்தால் ஏன் இன்னும் அமைதியாய் இருக்கிறார் ? மனிதனை இயற்கை எச்சரிக்கை செய்வதில்லையா?


இன்னும் தேடுவோம்.!!!