கவிதை தொகுப்பு
நிலை பிழை தவறும் தருணம் .. மனமங்கு
மாட்சியுமில்லை மகிமையுமில்லை மகேசனுமில்லை
இனி எவளுமில்லை போடி.
விட்டத்து மாடியில் சுற்றி திறந்த புறா
சுட்டான பின் பழி எதற்கு பாவம் எதற்கு
தந்தவன் மகேசன் எடுத்தவன் மகேசன்
பொருள் கூற எவருமில்லை அவனையன்றி..
சிறகுகளில்லா நாரை
தரையினில் சாகும் நாளை
காண்பதுமோர் பாவம்
உணர்வுகளேயினி சாகும்
யாரினி பிறப்பார் பாரும்
இடுகாடாய் இனி மாறும்.
வான் வருவான் மயிலோன்
தென் தருவான் குயிலோன்
இனி யாரிவரோ - மலர் தருவார் யாரோ
சுடுகின்ற வேலையில் பருநீர் தருவாரோ
மனம் மாறி வெதுவாகி இனிதான் இணைவாரோ
பார்க்கும் வேலையில் மாய்வரோ சாய்வாரோ
தோற்கும் வேலையில் மீள்வாரோ எழுவாரோ
வான் வருவான்... வருவான் .. வான் வழி வருவான் ...
காரிருள் மீது கதிரவன் தோன்றி
ஆயிரமாயிரம் விளக்குகள் ஏற்றி வைத்தான் ..
ஒளியது தோன்றியது அவனாலென அறிஞனும் சொல்லி வைத்தான்
கண்ணே உன்னை கண்டவுடன் மெய்யியல் நான் உணர்ந்தேன்
நீ துயிலெழுந்து சோம்பல் முறித்து வாசல் கோலம் போட
காணத்தான் சூரியனும் காத்திருக்கிறான்
சந்திரனுக்கு மட்டும் கோவம் உன் துயில் முகத்தை காணவில்லையென்று
அந்த மதி காணாததை இந்த மதி ஆயிரம் முறை பார்த்திருக்கிறான் இமைக்காமல்
விட்டு போ கவலையே..!!!
- ப. மதிஅழகன்
No comments:
Post a Comment