இனி
என்ன
வேண்டும் !!!
அன்னை
அவள்
இருக்கையிலே !!!
கஞ்சியோ
கூழோ
தாயே
நீ தந்தால்
எதுவும் எனக்கு
அமிர்தமே !!!
உண்டி மறந்து
உதிரம் தந்து
எனது ஊன்
வளர்த்தாய் தாயே!!!
சிட்டெறும்போன்று
என்னை கடித்தாலும்
உன்னுடைய கண் அல்லவா
முதலில் குளமாகும் !!!
மறந்தும் என்னை
அடித்து விட்டால்
மறைவாய் நின்று
அழுவாயே !!!
ஒவ்வொரு முறையும்
நான் சாதிக்கும் போதும்
உன் கண்களில் காணும்
பெருமிதம் - அதை விட
எனக்கென்ன விருது
வேண்டுமம்மா !!!
என்னிடம் எதுவும்
கேட்டதில்லை இதுநாள்
வரையில் -என் நலனை
தவிர .!!!
கவலைகள் கோடி
இருந்தாலும் - செல்வங்கள்
கோடி இருந்தாலும் ஒரு
நொடி உன் மடியினில்
தூங்கிட அனைத்தும்
அற்பமாகிவிடுகிறது தாயே !!!
என்னை ஈன்றவளே - இனி
ஒரு வரம் தான் உன்னை
கேட்கிறேன் - அடுத்த
பிறவியில் என் மகளாய்
பிறக்க வேண்டும் - என்
பிறவி கடனை அடைக்க
வேண்டும் தாயே!!!
ப. மதி அழகன்.