கேளாய் தமிழா கேளாய்
இனியொரு கணம் பொறுத்தது போதும்
பெரும் புயலென புறப்பட்டு - வஞ்சித்து
வென்றோர்க்கு பரணியில் இனி உயிர்
வாழ இடமில்லை என்று உரக்க சொல்வோம்.
உன் பார்வையின் வெப்பமது தாளாமல் வெந்து மடியட்டும் வீணர்கள்
வரிந்து கட்டி போர் முனையிலே அவன் புறமுதுகை தொட்டு பார்க்கட்டும் நமது வாள்கள்;
நின்று போனதும் அமைதி என்று நினைத்தயா வெறும் வேடிக்கை மனிதனல்ல தமிழன்
வீரமது சொல்லில் வருவதல்ல, தமிழ் தாயின் மார்பில் வருவது.
இடமது வலமது யாராயினும் இனியேனும் எங்களை சீண்ருடாதிருந்தால் அடைவாய் பயனை
இல்லையேல் தமிழன் உனக்கு காட்டுவான் எமனை.
வந்தோர்க்கும் வாழ்விழந்தோர்க்கும் அள்ளி கொடுக்கும் மண் எங்கள் மண்
மண் புழுவாக நினைத்தால் மண்ணிற்கு உரமாக்கி விடுவோம் உன்னை
சொல்லுக்கும் வில்லுக்கும் மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொருளுக்கும்
கலைக்கும் அழகுக்கும் கவிக்கும் பேர் போனது தமிழனின் பெருமை
அறிவியலை வெள்ளையன் அண்ணாந்து பார்க்கையில் அணுவை விவரித்தாள் அவ்வை கிழவி
அங்கே இலக்கியம் இல்லாத போதே என் பாட்டன் முப்பாட்டன்
ஆயிரமாயிரம் அற்புதங்களை படைத்தது விட்டான்
பிறிதொரு மொழியையோ மக்களையோ வேற்றுமை கருதும் வழக்கம் இல்லை எங்களுக்கு
என் பாட்டன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் , வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினேன் என்றார் - அவர்கள் வழி வந்தவர்கள் நாங்கள் இயற்கை அன்னை தந்த இப்புவியை
தமிழ் தாய் தந்த வரமாய் வணங்கி நிற்கிறோம் .
No comments:
Post a Comment