பிறவா நிலையை தருவாய் இறைவா !!!
இனி உன்னை பிரியாதொரு நிலை தருவாய் இறைவா !!!
கடவுளிடம் இப்படி வேண்டி கொள்கிறான் ஒரு பக்தன்.
சூரியனிலிருந்து பிரிந்த பூமிப்பந்து ஈர்ப்பு விசையால் கட்டுப்பட்டு நிற்கவும் மனமில்லாமல் விட்டு ஓடிடவும் மனமில்லாமல் தன்னையும் சூரியனையும் சுற்றி வருகிறது . சரி விஷயத்துக்கு வருவோம்.
மனிதனே இல்லாத அந்த காலகட்டம் எப்படி இருந்திருக்கும் . கற்பனை செய்து பார்ப்போமா, பூமி முழுவதும் சுத்தமான குடிநீர் , காற்று முக்கியமாக அமைதி அமைதியாய் இருந்திருக்கும். பறப்பன, ஊர்வன , நீந்துவன என எல்லா உயிரினமும் தங்கள் இனத்தை பெருக்கி இயற்கை வளங்களை சரி சமமாக இல்லா விட்டாலும் இயற்கை நியதிக்கு உட்பட்டு பங்கிட்டு கொண்டிருக்கும்.
எரிமலையும் நிலநடுக்கமும் சுனாமியும் சூறாவளியும் எந்த அறிவிப்புமின்றி அங்கங்கே வந்து போய் இருக்கும். உண்மையில் சில அறிவிப்புகள் இருக்கவும் செய்தன . நீங்கள் படுத்து தூங்கும் அறையோ , இதை நீங்கள் படிக்கும் இடமோ கண்டிப்பாக காடாகவோ சம வெளியாகவோ நீர் நிலையாகவோ இருந்திருக்கலாம்.
சரி இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைத்து பார்ப்போம். கடவுள் நம்மை ஏன் படைத்திருப்பார் ? நம்மை மட்டுமல்ல இந்த பூமியில் உள்ள புல் ,பூண்டு முதல் மனிதன் வரை ஏன் படைத்திருப்பார் ?
உற்று நோக்கினால் ஒரு விஷயம் புலப்படும். எல்லா உயிரினங்களும் ஒரே விஷயத்தைதான் செய்கின்றன . அது என்ன? தன் இனத்தை பெருக்குதல் மற்றும் காத்தல் . அழித்தல் பிற இனத்தாலோ அல்லது சுய இனத்தாலோ நடப்பது உண்டு. அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இனத்தை பெருக்கத்தான் கடவுளால் படைக்கப்பட்டோமா? இருக்கலாம்.
அனால் இங்கு படைக்கப்பட்டது எதுவாயினும் அழியவும் செய்கின்றது இது இயற்கையின் நியதி.
அழிவு எல்லாவற்றிற்கும் உண்டு. அப்போது அது பூமிக்குமா ? சூரியனுக்குமா?பிரபஞ்சத்துக்குமா? கடவுளுக்குமா ?.இப்படி உயிரனங்கள் தோன்றி மடிவதால் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும் .
இதை பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்.
மனிதன் இல்லாத உலகம் எத்தனை அழகாக இருந்திருக்கும் . இன்றும் மனிதன் நுழையாத காடுகள் இருக்கவே செய்கின்றன. மனிதன் தான் வாழும் பூமியை இப்படி நாசமாக்குவது கடவுளுக்கு/இயற்கைக்கு தெரியாதா ? தெரிந்தால் ஏன் இன்னும் அமைதியாய் இருக்கிறார் ? மனிதனை இயற்கை எச்சரிக்கை செய்வதில்லையா?
இன்னும் தேடுவோம்.!!!
No comments:
Post a Comment