உறைபனி உலகில்
Tuesday, June 22, 2021
நான் வாசித்த புத்தகங்கள் - பகுதி -1 (My favourite books -1)
Friday, June 11, 2021
பிரிவினிலே ஒரு நாள்..!!!
பிரிவினிலே ஒரு நாள்..!!!
தனியே
தன்னந்தனியே
தந்த வலியே
இன்ப துணையே
இன்று மறந்தாய் என்னையே ..!!!
இணையே
எந்தன் இணையே
உன்னை இழந்தாய்
என்னை மறந்தாய்
துணை ஏதுமில்லையே..!!!
கடலாய்
கங்கை நதியாய்
கண்ணீர் வடித்தேன்
கரைந்தோடி வா.!!!
உடலாய்
மண் உடலாய்
புதைமண் உடலாய்
மட்குமுன் தேடி வா.!!!
நெருப்பாய்
தீப்பிழம்பாய்
எரிமலையாய்
மனம் வெடிக்கும் முன்
நீ அணைக்க வா.!!!
காற்றாய்
சூழல் காற்றாய்
புயல் காற்றாய்
மனம் கடக்கும் முன்
நீ நினைவில் வா.!!!
வெளியாய்
வெட்ட வெளியாய்
வான வெளியில்
நான் மறையும் முன்
உயிரே நீ எதிரில் வா.!!!
ப.மதிஅழகன்
Thursday, June 10, 2021
குருதி ஆட்டம் அத்தியாயம் - 1
பகைவனின் கண்
அமைதியான காலை வேளை, சூரியன் மெல்ல தன் கதிர்களை பரப்பிக்கொண்டிருந்தான். குருவிகள் குதூகலமாக கீச்சிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன.விவசாயிகளோ காளைகளை உழவுக்கு கொண்டு சென்றார்கள்.பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்கள்.சூரிய கதிர்களின் வெளிச்சம் தாளாமல் கணேசன் மெல்ல எழுந்தான்.பாயைச் சுருட்டிக் கொண்டு மெல்ல வீட்டுக்குள் செல்லும் போது, இழுத்துப் போர்த்து தூங்கி கொண்டிருந்த மனைவி அலமேலுவைப் பார்த்து பொம்பளைங்க எல்லாம் வெளிய தண்ணி மோந்துகிட்ருக்காங்க, இன்னும் என்னடி தூக்கம் என்று கத்தினான். அதை சட்டை செய்யதவளாய் அவள் திரும்பி படுத்தாள். இந்தாடி இப்போ எந்திரிக்கல அப்புறம் புரட்டி புடுவேன் என்று திட்டியவாறு கொல்லைப்புறம் சென்றான். குளித்து முடித்து வீட்டிற்குள் வரும்போது அவள் மனையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தாள். அலமேலு கஞ்சி எடுத்து வையி , சாமி கும்புட்டு வந்துடுறேன். கஞ்சி பாத்திரத்தை எடுத்து குடித்தான் , உப்பு கரித்தது . மீண்டும் மனைவி மீது எரிச்சல் கொண்டான். என்னடி கஞ்சி கரைச்சிருக்க ,மனுஷன் வாயில வைக்க முடியல, மூதேவி ஒரு நாளாவது ஒழுங்கா கடைக்கு அனுப்புறியா என்று திட்டி தீர்த்தான்.
இப்போ எதுக்கு கத்துறிங்க என்று பதிலுக்கு சீறினாள். கூறுகெட்ட சிறுக்கி என்னைய எதுத்து பேசுறியா என்று ஓங்கி அறைந்தான். இந்தாரும் சும்மா மேல கை வைக்கிற வேலை வேணாம். எங்கண்ணங்க கிட்ட சொன்ன அம்புட்டுதான் என்று விசும்பினாள் .
சீமையில்லாத அண்ணங்க என்று ஆரம்பிக்க , இடைமறித்த அவள் , இந்தாங்க எங்க அம்மா வூட்ட பத்தி பேசுனா அம்புட்டுதான் , அப்புறம் நான் எங்க ஆத்தா வூட்டுக்கு போயிடுவேன் என்று அழுதாள்.
குருதி ஆட்டம் - முன்னுரை
குருதி ஆட்டம்
நான் வாசித்த புத்தகங்கள்
நான் வாசித்த புத்தகங்கள்
அன்பு நண்பர்களுக்கு ,
நான் வாசித்த சில நூல்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பொதுவாகவே இன்றைய கால மக்களுக்கு புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாகவே கருதுகிறேன் ,
புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பவர்களும் எந்த புத்தகத்தை படிப்பது , எந்த வகை நூல்களை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருப்பதையும் பார்க்க முடிகிறது . நீங்கள் புத்தகம் படிக்கும் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளில் படித்தால் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம் .
நிறைய புத்தகங்கள் படித்திருந்தாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு முறை நான் படித்த புத்தகங்களை அசை போட வேண்டியுள்ளது. ஒரு நல்ல புத்தகம் நாம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம்மை இன்னும் மேம்படுத்தும் என்பதும் என் எண்ணம் .
அடுத்த தொடரில் இன்னும் நிறைய பகிர்வோம்.
-ப.மதி அழகன்
Wednesday, February 24, 2021
ஏலே செங்குருவி ...!!! - Yele Senguruvi !!!
ஏலே செங்குருவி ...!!!
ஏலே செங்குருவி
உன் சீலை வாசம்
மோரத்தான் வந்துருக்கேன் ..!
ஆவி போகும் பின்னே
பாதை மறக்கும் முன்னே
உன் காலடி தேடி வந்துருக்கேன் ..! (ஏலே)
நேத்து என் ரோஷம்
காத்தா போனதடி
மீண்டும் உன் வாசம்
தேடி எங்கும் அலையுதடி ..!
செத்த நேரம் உன் மடியில தல சாஞ்சா
மொத்த உசுரும் கூடுமடி..! (ஏலே)
வீழாதே என் சிங்கமே
மாறாதே என் தங்கமே
கம்ப கூழ் வச்சிருக்கேன்
கருவாடு சுட்டுருக்கேன்
ஒத்த வாயி துண்ணுப்புட்டா
போகும் உசுரு நின்னுடுமே ..!
அக்கரையில் வீச்சருவா
இக்கரையில் வெட்டருவா
உன் கையோ மல்லிகைப்பூ
என் கையோ காகிதப்பூ
சாதி தீயில் வேகுதிப்போ..! (ஏலே)
- ப.மதிஅழகன்